தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனிமூட்டம் காரணமாக சிறுமலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பேர் படுகாயம்! - dindigul news in tamil

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சிறுமலை பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து

By

Published : Jan 24, 2023, 12:41 PM IST

Updated : Jan 24, 2023, 1:14 PM IST

பனிமூட்டம் காரணமாக சிறுமலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பேர் படுகாயம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுமலை ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதி முழுவதும் விவசாய சார்ந்த பகுதியாக உள்ளது. இப்பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து காலை 5:15 மணிக்கு அரசு பேருந்து சிறுமலை நோக்கி சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுநர் விஜயகுமார் இயக்கியுள்ளார். சேகர் என்பவர் நடத்துனராக இருந்தார். இந்நிலையில் பேருந்து சிறுமலையை நோக்கிச் சென்ற பொழுது சிறுமலை 18 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அதிக அளவு பனிப்பொழிவு காரணமாக ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்தினர் உட்பட சிறுமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், பழனி, அம்மாள், கோபால் பாஸ்கரன், கார்த்தி, கணேசன் உட்பட 16 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சினிமா பாணியில் பெப்பர் ஸ்பிரேவுடன் வங்கியில் கொள்ளை முயற்சி.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Last Updated : Jan 24, 2023, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details