தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறை! - பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு 11 ஆண்டுகள் சிறை

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு  11 ஆண்டுகள் சிறை
பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு 11 ஆண்டுகள் சிறை

By

Published : Feb 12, 2021, 11:05 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்த தன்னுடைய உறவினரின் 15 மகளை நன்றாக படிக்க வைப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இத‌னை அறிந்த‌ மாணவியின் பெற்றோர் திண்டுக்க‌ல் அனைத்து ம‌க‌ளிர் காவ‌ல் நிலைய‌த்தில் புகார் அளித்த‌ன‌ர். அத‌ன் பேரில் காவ‌ல் துறையின‌ர் வ‌ழ‌க்கு ப‌திவு செய்து பிசியோதெரபிஸ்ட்டை கைது செய்த‌ன‌ர்.

இது தொடர்பான வ‌ழ‌க்கு திண்டுக்க‌ல் ம‌க‌ளிர் நீதி ம‌ன்ற‌த்தில் விசாரிக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. அப்போது அரசு ம‌ருத்துவ‌ர் உள்பட மொத்தம் 18 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக நீதிம‌ன்ற‌த்தில் சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் வழ‌க்க‌றிஞ‌ர் கோப்பெருந்தேவி ஆஜராகி வாதாடினார். விசார‌ணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 11 ஆண்டுக‌ள் சிறை த‌ண்ட‌னையும், 10 ஆயிர‌ம் அப‌ராத‌மும் விதித்து நீதிப‌தி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார். அப‌ராத‌த்தை க‌ட்டத‌வ‌றும் ப‌ட்ச‌த்தில் 6 மாத‌ம் சிறை த‌ண்ட‌னை விதித்தும் உத்திர‌விட்டார்.

ABOUT THE AUTHOR

...view details