திண்டுக்கல் மலைக்கோட்டையின் பின்புறமாக முத்தழகுபட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 300 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா நடைபெறுவது வழக்கம். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா;1000 ஆடுகள், 2000 கோழிகள் அறுத்து ஒரு லட்சம் பேருக்கு கறிவிருந்து! - திண்டுக்கல் அருகே முத்தழகுபட்டி
திண்டுக்கல் அருகே முத்தழகுபட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில், 1000 ஆடுகள், 2000 கோழிகள் சமைக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.

அன்னதானம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 1000-க்கும் மேலான ஆடுகள், 2000-க்கும் மேலான கோழிகளை ஒன்றாக சமைத்து ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றன. இதற்கான பணியில் ஊர் பொதுமக்கள், மகளிர் சங்கங்கள் என நூற்றுக்கணக்கானோர் பல மணி நேரமாக இந்த உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா;1000 ஆடுகள், 2000 கோழிகள் அறுத்து ஒரு லட்சம் பேருக்கு கறிவிருந்து!
இதையும் படிங்க: விரைவில் ஆவின் குடிநீர் பாட்டில் - அமைச்சர் நாசர்
TAGGED:
Muthalagupatti near Dindigul