தருமபுரி:தொப்பூர் அருகே கருக்கானூர் கிராமத்தில் வயல் வெளியில் மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி மயக்க நிலையில் இருந்தது. இதனை கண்ட நிலத்தின் உரிமையாளர் கண்ணப்பன் அந்த மலைப்பாம்பை பிடிக்க தருமபுரி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் வனத்துறையினர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனையடுத்து கண்ணப்பன் தனது நண்பர்கள் உதவியுடன் மலைப் பாம்பை பிடித்து சாக்குபையில் அடைத்து வைத்து வனத் துறையினருக்காக காத்திருந்துள்ளார்.
ஆனால் வனத்துறையினர் நீண்ட நேரமாகியும் தருமபுரியிலிருந்து வனத்துறையினர் வராததால், பிடித்த மலைப் பாம்பை ஒரு கோணிப்பையில் வைத்து கட்டி கொண்டு, தனது நண்பர் வடிவேலுடன், கண்ணப்பன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தார்.