தர்மபுரி:காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு பாரதி மோகன் தலைமையிலான போலீசார், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற இருவர் கைது - Phone Pay
தர்மபுரியில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது காரிமங்கலம் ஆலமரசம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவர்கள் கூகுள் பே, போன் பே மூலமாக பணத்தை பெற்று கொண்டு, இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதும் கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆனைமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது