தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் 5 கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மேல்நிலை நீா்தேக்க தொட்டி அமைந்துள்ளது. முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர் தேக்க தொட்டி சுமார் 60 அடி உயரத்தில் உள்ளது.
நேற்று இரவு 3 இளைஞர்கள் இந்த மேல்நிலை தொட்டியின் மீது அமர்ந்து மது மற்றும் கஞ்சா புகைத்ததாக கூறப்படுகிறது. இந்த இளைஞர்கள் நீர்த்தேக்க தொட்டியின் மீது அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள், இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்து கீழே இறக்கியுள்ளனா்.
இதனிடையே கஞ்சா மற்றும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் குடிநீா் தொட்டியில் சிறுநீா் கழித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உடனடியாக குடிநீர் விநியோகத்தை நிறுத்தினார்.