தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பள்ளி மாணவன் மூழ்கி உயிரிழப்பு - dharmapuri district news

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஈமகாரியத்திற்காக சென்ற பள்ளி மாணவன் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

s
s

By

Published : Jan 24, 2022, 7:41 PM IST

Updated : Jan 24, 2022, 8:46 PM IST

தருமபுரி : காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் ரஞ்சித் குமார்(16). அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தனது உறவினரின் காரிய நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்குச் சென்றுள்ளனர்.

ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது ரஞ்சித்குமார் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

அதைப் பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ராஜா, ரஞ்சித் குமார், இளங்கோவன் உள்ளிட்ட தீயணைப்புப் படையினர் ஆற்றில் மூழ்கிய ரஞ்சித்குமாரை மீட்டனர்.

உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட ரஞ்சித்குமார் ஒகேனக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ரஞ்சித் குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ரூ.80 ஆயிரம்.. பெற்றக் குழந்தையை விற்ற பாசக்கார தந்தை!

Last Updated : Jan 24, 2022, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details