தர்மபுரி: கரோனா பரவல் காரணமாக இன்று (மே 10) முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அரூர், பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று (மே 9) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருந்தகம், பாலகம், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ் தவிர்த்து ஏனைய கடைகள், வணிக நிறுவனங்கள், பொதுமக்களின் நடமாட்டம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளது.