தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் செல்லும் மலைப்பாதையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி அபாயகரமாக வாகன சேசிங், ஓடும் இருசக்கர வாகனத்தில் நின்று சாகசம் செய்துவருகின்றனர்.
ஒகேனக்கல் மலைப்பாதையில் பைக்கில் சாகசம் செய்யும் இளைஞர்கள் நேற்று முன்தினம் (ஏப்ரல் 18) ஞாயிற்றுக்கிழமை என்பதால் சில இளைஞர்கள் இருசக்கர வாகனம் இயக்கத்தில் இருந்தபோது வாகனத்தில் மேலே நின்று சாகசம் செய்துவரும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் வளைவான மலைப்பாதையில் இதுபோன்று சாகசம் செய்யும்போது எதிரே வரும் வாகனங்கள், கார் போன்றவற்றில் மோதும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது.
மலைப்பாதையில் மெதுவாகச் செல்லவும் எனப் பல இடங்களில் பதாகை இருந்தும் இளைஞா்கள் மலைப்பாதையில் சாகசம் செய்வது தொடர்ந்து வருகிறது.
சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.