தர்மபுரி மாவட்டம், அரூா், தென்பெண்ணை ஆற்றின் பாலத்தின்கீழ் நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்தத் தகவலின்பேரில், கோட்டப்பட்டி காவல் துறையினர் அங்கு விரைந்து, இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அந்நபர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த இளங்குன்னி பகுதியைச் சார்ந்த அபிமன்னன் என்பதும், இவர் ஈரோட்டில் கூலி வேலை செய்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இவருடைய மகன் கிளின்டன், இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஓசூர் பகுதியில் உள்ள பட்டாசுக் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். தொடந்து, காவல் துறையினர் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.