தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ராஜாஜி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை ஒட்டி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இப்பயிற்சி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.
கோடை வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் குவிந்த இளைஞர்கள் - swiming pool
தருமபுரி: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர்.
நீச்சல் குளத்தில் குவிந்த இளைஞர்கள்
இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதிகளவில் இளைஞர்களும் நீச்சல் குளத்திற்கு வருகை தருகின்றனர். இதனால் நீச்சல் குளம் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.