தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபேஸ்புக் காதல் திருமணம்: உயிரிழந்த மகளின் உடலை வாங்க மறுத்தப் பெற்றோர் - இளம்பெண் தற்கொலை

தருமபுரி: ஃபேஸ்புக் காதல் திருமணம் செய்து கொண்ட மகளின் உடலை வாங்க மறுத்துப் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மகளின் உடலை வாங்க மறுத்தப் பெற்றோர்
உயிரிழந்த மகளின் உடலை வாங்க மறுத்தப் பெற்றோர்

By

Published : Oct 14, 2020, 8:10 AM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் இங்குள்ள தனியார் பால் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

விக்னேஷ் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த காஞ்சனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை காஞ்சனா, வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாரண்டஹள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தனது மகள் வரதட்சணை கொடுமையால் தான் மரணமடைந்துள்ளதாகக் கூறிய காஞ்சனாவின் பெற்றோர், உடலை வாங்குவதற்கு கூட கணவன் வரவில்லை என்று சுட்டிக்காட்டி மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சனாவின் உறவினா்களிடம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவரது உடலுக்கு மருத்துவமனைப் பிணவறை முன்பு இறுதி சடங்கு செய்தனா். பின்னர் உடலை விக்னேஷின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:உன்னை வாழ விடமாட்டேன்: அதிமுக நிர்வாகிக்கு மிரட்டல் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details