தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு - Dharmapuri latest news

தருமபுரி: கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Young boy drowns in well
Young boy drowns in well

By

Published : Jun 2, 2020, 9:20 PM IST

தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் தெரு அருகே விவசாய கிணற்றில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த பிரதீப் குமார், அவரது சகோதரர் சந்துரு மற்றும் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரம் குளித்துவிட்டு அனைவரும் கிணற்றை விட்டு மேலே ஏறிவிட்ட நிலையில் பிரதீப் குமார் ஏறும்போது தவறி மீண்டும் கிணற்றில் விழுந்துள்ளார்.

உடனடியாக அவருடைய சகோதரர் மற்றும் நண்பர்கள் கிணற்றில் இறங்கி தேடியுள்ளனர். நீண்ட நேரமாகியும் பிரதீப் குமார் கிடைக்காத நிலையில் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

Young boy drowns in well

இதுகுறித்து, தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போரட்டத்திற்கு பிறகு உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details