உலக இட்லி தினத்தை முன்னிட்டு தருமபுரி இட்லி சாப்பிடும் போட்டி தருமபுரி:உலகின் உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பட்டியலில் இட்லிக்கு மிக முக்கியமான இடத்தை, உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு 2015-ல் உலக இட்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி அருகே தனியார் உணவகத்தில் நேற்று(மார்ச் 30) இட்லி தினத்தை முன்னிட்டு, இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
இதனால், இட்லி பிரியர்கள் போட்டிக்காக முன்பதிவு செய்தனர். இந்த இட்லி உட்கொள்ளும் போட்டியில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துk கொண்டனர். இதில், சைவ பிரியர்களுக்கு இட்லியுடன் சைவ குருமாவும் மற்றும் அசைவ பிரியர்களுக்கு இட்லியுடன் சிக்கன் குழம்பும் வழங்கினர்.
இரண்டு நிமிடத்தில் 10 இட்லி யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு முதல் பரிசு என்ற வகையில் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டதால், மூன்று சுற்றுகளாகப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், இரண்டு நிமிடத்தில் 14 இட்லி சாப்பிட்ட நபர் முதல் பரிசை பெற்றார். மேலும், அதே இரண்டு நிமிடத்தில் ஒன்பது இட்லி சாப்பிட்ட நபருக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது. மேலும், முதல் பரிசு பெற்ற ஏழுமலை என்பவருக்கு ஆயிரம் ரூபாய்க்கான உணவு டோக்கன் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஏப்ரல் 1 முதல் இவையெல்லாம் மாறுது.. அவசியம் படிங்க மக்களே!