தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! - மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

palacode_suside
palacode_suside

By

Published : Oct 2, 2020, 8:39 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடை அடுத்த அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

அருண்குமார், தன் தாய் மற்றும் மனைவியின் நகைகளை அடகு வைத்து சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், தன் தாயின் நகைகளை மட்டும் மீட்டுக் கொடுத்த அருண்குமார், பூங்கொடியின் நகைகளை மீட்டு தரவில்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷமருந்திய பூங்கொடி, ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்பு வீடு திரும்பினார்.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இரண்டு நாளில், பூங்கொடி வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாரண்டஹள்ளி காவலர்கள் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பூங்கொடியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :உறவினர் காரை கொடுக்கவில்லை: ஆத்திரத்தில் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்...!

ABOUT THE AUTHOR

...view details