தர்மபுரி மாவட்டத்தில் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து, மாவட்ட பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைசா மேரி தலைமையில் பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விலை உயர்வு; ஒப்பாரி வைத்து போராடிய மாதர் சங்கம் - Mather's Association protest in dharmapuri
தர்மபுரி: அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

Mather's Association protest for Rising prices of essential commodities
அப்போது, தீபாவளியை முன்னிட்டு பண்டிகைக்கால பஜார் கடை அமைத்து மளிகை பொருள்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும், குடும்ப அட்டைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், கேஸ் சிலிண்டருக்கு வெங்காய மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: டன் கணக்கில் கலப்பட வெல்லம் பறிமுதல்: உணவுத்துறை அலுவலர்கள் அதிரடி!