தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (33). லட்சுமி கோவையில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு முருகன் மது போதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரவு இரண்டு மணி அளவில் வீட்டிற்கு அருகே இருந்த வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது.
அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்துவிட்டு லட்சுமியை தேடியுள்ளனர். ஆனால் காலை வரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அதிகாலையில் லட்சுமியின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.