தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண் வேடமணிந்து குட்கா கடத்திய பெண் கைது - ஆண் வேடம் அணிந்து குட்கா கடத்திய பெண்

ஆண் வேடம் அணிந்து குட்கா கடத்திய விழுப்புரத்தைச் சார்ந்த பெண் தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.

gutka  gutka smuggle  women as man  dharmapuri  dharmapuri news  dharmapuri latest news  குட்கா கடத்தல்  ஆண் வேடம்  குட்கா கடத்திய பெண்  ஆண் வேடம் அணிந்து குட்கா கடத்திய பெண்  மினி சரக்கு லாரி
ஆண் வேடம் அணிந்து குட்கா கடத்திய பெண்

By

Published : Oct 9, 2022, 6:47 AM IST

தர்மபுரி:கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலம், ஈரோடு, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக தர்மபுரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட எல்லை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் அடுத்த கும்பரஹள்ளி சோதனை சாவடியில் போலீசார் அந்த வழியாக வந்த மினி சரக்கு லாரியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது அந்த வாகனத்தில் 900 கிலோ குட்கா இருப்பதை கண்டறிந்தனர். அதன்பின் ஓட்டுநரை கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், ஓட்டுநர் பெண் என்பதும் அவர் விழுப்புரத்தை சேர்ந்த ஈஸ்வரி என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கட்டுகட்டா போலி 2,000 ரூபாய் நோட்டுகள்... சிக்கிய 3 பேர்..

ABOUT THE AUTHOR

...view details