தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.பி. உத்தரவு
இதையடுத்து, சட்டவிரோதமாக குட்கா பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அதன்படி, பாலக்கோடு காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான காவலர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில், பாலக்கோடு அருகேயுள்ள பேளார அள்ளி கிராமத்தில் மாரிமுத்து என்பவரின் மனைவி பச்சியம்மாள் (33) பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது.
கைது
பின்னர் அவரிடமிருந்து 2 கிலோ அளவிலான குட்கா பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் பச்சியம்மாள் மீது வழக்குப்பதிந்து அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க:சாலையில் புகையிலை பொருட்கள் வீசிச் சென்றவர் கைது !