தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி - electricity accident

தருமபுரி: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மின்சாரம்

By

Published : Jul 11, 2019, 1:13 PM IST

Updated : Jul 11, 2019, 1:29 PM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூத நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (47). இவருக்கு திருமணமாகி மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பழனி ராமியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் ராமியம்பட்டி வி.ஐ.டி. நகரில் ராமலிங்கம் என்பவரது தென்னந்தோப்பில் மின் கம்பிகள் மீது தென்னை மட்டைகள் விழுந்திருந்தன. அதனை அப்புறப்படுத்த பழனி தென்னை மரத்தில் ஏறினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பழனி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். உடனடியாக சக ஊழியர்கள் அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Last Updated : Jul 11, 2019, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details