தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தூரமெல்லாம் தூசி போல...’; ஒரு கிலோ மீட்டர் தூரம் நின்ற குடிமகன்கள் - மது

அரூரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று ’குடி’மகன்கள் மது வாங்கி சென்றனர்.

1 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று மது வாங்கிச் சென்ற குடிமகன்கள்
1 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று மது வாங்கிச் சென்ற குடிமகன்கள்

By

Published : Jun 14, 2021, 2:46 PM IST

அரூர் : தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மது கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றன. மேலும் கடை முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

6 அடி இடைவெளியில், ஐவருக்கு மிகாமல் நின்று மது வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள மதுக்கடையில், மது வாங்க கடை திறப்பதற்கு முன்பே, காலை 7 மணியிலிருந்து நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்தனர்.

1 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று மது வாங்கிச் சென்ற குடிமகன்கள்

விற்பனையின்போது தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்ற ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மதுக்கடை முன்பு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details