தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இன்று (நவம்பர் 19) அதிகாலை எலகுண்டூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் காட்டு யானை விழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து வனத் துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
கிணற்றில் விழுந்த காட்டு யானை: மீட்கும் பணியில் வனத் துறை - விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை
தருமபுரி: பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு வனத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
elephant
இந்தத் தகவலையடுத்து அங்கு வந்த வனத் துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக கிணற்றிலிருந்த தண்ணீரை மோட்டர் மூலம் வெளியேற்றினர். பின் யானைக்கு மயக்க ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து யானைக்கு உணவாக தென்னை ஓலைகள் வழங்கப்பட்டுவருகின்றன. யானை மயக்கம் அடைந்தவுடன் ராட்சச எந்திரங்கள் மூலம் வனத் துறையினர், தீயணைப்புத் துறையினா் பலமணி நேரமாகப் போராடி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.