தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் பாய்ந்து காட்டு யானை உயிரிழப்பு

பாலக்கோடு அருகே மின்வேலி அமைக்கப்பட்ட நெல்வயலில் நுழைய முயன்ற மக்னா காட்டு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு அருகே மின் இணைப்பில் உரசிய யானை பரிதாபமாக உயிரிழப்பு
பாலக்கோடு அருகே மின் இணைப்பில் உரசிய யானை பரிதாபமாக உயிரிழப்பு

By

Published : May 13, 2022, 1:27 PM IST

தர்மபுரி: பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன் (52). இவர் தனது நிலத்தில் நெல் நடவு செய்துள்ளார்.

இந்த நிலத்தில் இரவில் வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்துடன் வயலின் மையத்தில் மின் இணைப்பு ஏற்படுத்தி விளக்கு ஒன்றை அமைத்து இரவில் வெளிச்சம் இருக்கும் வகையில் அவர் செய்திருந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு (மே.12) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள காப்புக்காட்டில் இருந்து கீழிறங்கிய 40 வயதுடைய மக்னா காட்டு யானை சீனிவாசனின் வயலில் நுழைந்துள்ளது.

எதிர்பாராத விதமாக அவர் வயலில் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்த மின் பாதையில் மோதிய காட்டு யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யானை அதே இடத்தில் உயிரிழந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விவசாயி சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமணமான ஏழே மாதத்தில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details