தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரவள்ளி கிழங்கு செடிகளை தாக்கிய வெள்ளை பூஞ்சை! - வெள்ளை பூஞ்சை

தர்மபுரி அரூரில் மரவள்ளி செடிகளை முழுவதும் வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் தாக்கி வருகின்றன.

white fungus attacks cassava plants in dharmapuri  cassava plants  white fungus attacks cassava plants  white fungus  dharmapuri news  dharmapuri latest news  தர்மபுரி செய்திகள்  தர்மபுரியில் மரவள்ளி கிழங்கு செடிகளை தாக்கிய வெள்ளை பூஞ்சை  வெள்ளை பூஞ்சை  மரவள்ளி கிழங்கு  மரவள்ளி கிழங்கு செடிகள்  வெள்ளை பூஞ்சை  செடிகளை தாக்கும் வெள்ளை பூஞ்சை
வெள்ளை பூஞ்சை

By

Published : Aug 2, 2021, 3:31 PM IST

தர்மபுரி:அரூர் பகுதியில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மரவள்ளி கிழங்கு ஓராண்டு கால பயிராகும். ஆரூரில் இவை சாகுபடி செய்யப்பட்டு ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ளது.

பூச்சி தாக்குதல் - விவசாயிகள் பாதிப்பு

தற்போது செடிகளில் சிழங்குகள் முளைக்க உள்ள நிலையில், செடிகள் முழுவதையும் வெள்ளை பூஞ்சை நோய்கள் தாக்கி வருகின்றன. இதனால் செடிகள் வளராமல் அழுகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

செடிகளை தாக்கும் பூஞ்சை

இந்த நோய் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரவி, சாகுபடி செய்துள்ள மொத்த பயிர்களையும் அழித்து வருகிறது.

இதனால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

விவசாயிகள் வேதனை

தோட்டக்கலை துறை ஆய்வு

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜி.மாலினி, அரூர் வட்டார உதவி இயக்குனர் எஸ்.ராஜேஸ் கண்ணன் உள்ளிட்டோர் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து, பின் செடிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மரவள்ளி செடியில் தாக்கியுள்ள வெள்ளை பூஞ்சைகளை வராமல் தடுப்பதற்கு, பூஞ்சை தாங்கியுள்ள பகுதிகளை உடைத்து விட்டு, மருந்து தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் மருந்து தெளிப்பதற்கு தேவையான வழிகாட்டு முறைகள் அடங்கிய துண்டறிக்கையை விவசாயிகளுக்கு வழங்கினர்.

ஆய்வு மேற்கொண்ட தோட்டக்கலை துறை

ரசாயனங்களை தவிர்க்க..

பின்னர் விவசாயிகளிடம் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறுகையில், “தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருள்கள் உள்ளிட்ட உதவிகளை, மானியத்தில் அரசு வழங்கி வருகிறது.

இதன் மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தும் வருகிறது. எனவே விவசாயிகள் ரசாயனங்களை தவிர்த்து, முழுமையாக இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டும், முன்வரவேண்டும்” என அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: பழனி கோயில் முன் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details