தர்மபுரிமாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று (ஜூன்.13) நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோயில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. இதில், தேர் திருவிழாவில் 18 கிராமத்தைச் சார்ந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் வீதியில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து சாய்ந்தது.
தர்மபுரி தேர் விபத்து சம்பவத்தில் நடந்தது என்ன ? நெஞ்சை பதறவைக்கும் திக் திக் நிமிடங்கள்... இதனிடையே, தேர் நிலை சேர்வதற்குள் தேர் அச்சு முறிந்து தேர் முன் பக்கமாகக் கவிழ்ந்தது. திருவிழாவில் ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தேர் சாய்ந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தர்மபுரி தேர் விபத்து சம்பவத்தில் நடந்தது என்ன ? இந்த விபத்தில் பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா காலனியை சேர்ந்த மாதன் என்பவரது மகன் மனோகரன் மற்றும் சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த நான்கு பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா நோய் தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த தேர் திருவிழா நேற்று நடைபெற்றநிலையில் தேர் அச்சு முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்த மனோகரன் மற்றும் சரவணன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயும் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி தேர் விபத்து சம்பவத்தில் நடந்தது என்ன ? நெஞ்சை பதறவைக்கும் திக் திக் நிமிடங்கள்... விபத்தில் காயமடைந்தவர்களை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே.மணி, பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.ப. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அக்காவின் வாழ்க்கையே முடிந்துவிட்டது' - தர்மபுரி தேர் விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர் கவலை!