தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் தபா சிவா தலைமையில் இன்று நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - latest dharmapuri district news
தர்மபுரியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அகில இந்திய மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிங்க:ராமதாசை விட வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தவர் யாருமில்லை- மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்