தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்'  - செந்தில்குமார் எம்பி

தருமபுரி: எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி., செந்தில்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
திமுக எம்.பி., செந்தில்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

By

Published : Jul 30, 2020, 12:37 AM IST

சென்னை-சேலம் பசுமை வழிச் சாலை தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் எட்டு வழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் எட்டு வழிச் சாலையானது பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதியில் சுமார் 52 கிலோ மீட்டர் வரை செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களை க் கையகப்படுத்த அரசு நில அளவை செய்து முடித்துள்ளது. எட்டு வழிச் சாலை அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களைச் செய்து வருகின்றனர்.

திமுக எம்பி செந்தில்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
இந்நிலையில், எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் இன்று (ஜூலை 29) தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரைச் சந்தித்து அத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார், "எட்டு வழிச் சாலை அமைக்க தொடர்ந்து மாநில அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. எட்டு வழிச் சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எட்டு வழிச் சாலை அமைக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், பள்ளிக்கூடங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும். இதனால் விவசாயிகள், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.


ஏற்கனவே, சென்னையிலிருந்து சேலத்திற்குச் செல்ல செங்கல்பட்டு வழியாக ஒரு சாலையும் வேலூர் வழியாக மற்றொரு சாலையும் உள்ளன. இதுகுறித்து அரசாங்கத்திடம் கேட்டதற்குப் பதில் கிடைக்கவில்லை. இத்திட்டத்தை அரசு நிறைவேற்றினால் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊரடங்கை பயன்படுத்தி 8 வழி சாலை பணிகளை தொடங்குவதா ? - கனிமொழி எம்.பி கண்டனம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details