தர்மபுரி:விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு தர்மபுரி சட்டப்பேரவை தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவை எதிர்த்து திமுக தேர்தலைச் சந்தித்து வருகிறது.
எல்லா வளமும் பொருந்திய பாஜக, மத்திய அரசின் அனைத்து அதிகாரங்களையும் அதிமுகவின் பின்னணியில் நிறுத்தி, தங்களின் முகமாக அதிமுகவை நிறுத்தியுள்ளது. பரம்பரைப் பகை, கொள்கை பகையாளிகளை எதிர்த்து திமுக தேர்தலைச் சந்திக்கிறது. சுயமரியாதை, சமுகநீதி, திராவிட இயக்க கொள்கைகள் அனைத்தையும் ஒழித்துக்கட்டவேண்டும் என்று நினைக்கக்கூடியவர்களைத் தேர்தலில் சந்திக்கப்போகிறோம்.