கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொடர் மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு - waterfall increase in hogenakkal
தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக உயர்வு.
waterfall increase in hogenakkal due to heavy rain
இன்று (அக். 24) காலை தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதையடுத்து இன்று 6 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையும் படிங்க... ஒகேனக்கலை பன்னாட்டு சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும் - தருமபுரி எம்.பி கோரிக்கை!