தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவில் தொடர் மழை- ஒகேனக்கலில் அதிகரிக்கும் நீர்வரத்து!

தருமபுரி: கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து அம்மாநில அணைகளில் இருந்து திறந்துவிடும் நீர் ஒகேனக்கல் வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,500 அடியாக உயர்ந்துள்ளது.

water rise in hogenakkal due to continuous rain in karnataka
water rise in hogenakkal due to continuous rain in karnataka

By

Published : Jul 27, 2020, 5:46 PM IST

கர்நாடக மாநிலத்தில் சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து அம்மாநில அணைகளான கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6,111 கன அடி தண்ணீரும் கபினி அணையில் இருந்து 2,500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டுவருகிறது.

ஒகேனக்கல்

இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 7,000 கன அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் இரண்டு நாள்கள் கழித்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வந்து அடைந்தது.

ஒகேனக்கலில் அதிகரிக்கும் நீர்வரத்து

தற்போது ஒகேனக்கல் நீர்வரத்து 8,500 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...ஆம்பன் கருணையால் ஒகேனக்கல் ஐந்தருவியில் கொட்டும் நீர்!

ABOUT THE AUTHOR

...view details