தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

தருமபுரி: வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி .அன்பழகன் திறந்து வைத்தார்.

வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

By

Published : Feb 19, 2021, 9:24 PM IST

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் வள்ளி மதுரை கிராமம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 2255 ஏக்கர் நிலங்களுக்கு 20 நாள்களுக்கும், நேரடி பாசனம் மூலம் புதிய ஆயக்கட்டு பரப்பு 2853 ஏக்கர் நிலங்களுக்கும் தொடர்ந்து 20 நாள்களுக்கு தண்ணீர் விட்டு மொத்தம் 5108 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெறும்.

40 நாள்களுக்கு நாளொன்றுக்கு 30 கனஅடி வீதம் பிப்.19ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, புதூர், எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளப்பட்டி ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.

விவசாய மக்கள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் வேண்டுகோள் வைத்தார்.

இதையும் படிங்க: கண்மாய் தண்ணீர் பச்சை நிறமாக மாறியதால் பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details