கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 20,500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
திறக்கப்பட்டத் தண்ணீா் இன்று மாலைக்குள் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 5,000 கனஅடியாக உள்ளது.