தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கர்நாடக அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்வு - தருமபுரி மாவட்ட செய்திகள்
தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து இன்று (அக்.02) 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல்
இந்நிலையில் நேற்று(அக்.01) ஒரேநாளில் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று (அக்.02) 3 ஆயிரம் நீர் அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு