காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி, பிலிகுண்டு, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்துவந்த மழையின் அளவு குறைந்துள்ளது. இதன் மூலம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நேற்று (அக்.05) 13 ஆயிரம் கன அடியாக இருந்தது.
ஒகேனக்கல் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாகக் குறைவு! - hoganakkal lake
தருமபுரி : ஒகேனக்கல் அணைக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
ஒகேனக்கல்
இந்நிலையில் இன்று (அக்.06) ஒகேனக்கல்லில் படிப்படியாக நீரின் அளவு மூன்றாயிரம் கனஅடி வரை குறைந்த நிலையில், தற்போது 10 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஊரடங்கு காரணமாக ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க:ஒகேனக்கல் நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக உயர்வு