தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை! - latest Dharmapuri News in Tamil

Hogenakkal falls: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கலில் நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

hogenakkal falls
ஒகேனக்கல் அருவி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 9:38 AM IST

Updated : Nov 9, 2023, 2:15 PM IST

ஒகேனக்கல்

தருமபுரி:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 8000 கன அடிக்கு கூடுதலாக தண்ணீர் வரத்து இருந்தால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கத் தடை விதிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று (நவ.9) காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 11 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது.

இதன் காரணமாக தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி பரிசல் இயக்குவதற்கு தடை விதித்துள்ளது. அருவிகள் மற்றும் பாதுகாப்பான காவிரி ஆற்றுப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழக மற்றும் கர்நாடக எல்லைகளில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் வனப்ப குதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதன் இயற்கை அழகை ரசிக்க ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பொதுமக்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தொடரும் கனமழை.. 5 மாவட்டங்களில் இன்று(நவ.9) பள்ளிகளுக்கு விடுமுறை!

Last Updated : Nov 9, 2023, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details