தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு! - Dharmapuri District News
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தளி உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாகவும் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1800 கனஅடியாக இருந்து வந்த நிலையில், இன்று ஆயிரத்து 200 கன அடி உயர்ந்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:முதுமலை புலிகள் காப்பகம் 10 மாதத்திற்குப் பிறகு திறப்பு!