கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு! - தருமபுரி
தருமபுரி: கர்நாடக மாநிலத்திலிருந்து ஒகேனக்கலுக்கு வரக்கூடிய நீர்வரத்து 4 ஆயிரத்து 800 கன அடியாக உயர்ந்ததுள்ளது.
தற்போது காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரக்கூடிய நீரின் அளவு 4 ஆயிரத்து 800 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதிகரித்துள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி ஆற்றில் வரக்கூடிய நீரின் அளவு உயர்ந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்குச் செல்லக்கூடிய நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.