தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல், காவிரி ஆற்றில் இரு வாரங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக கர்நாடக அணைகளிலிருந்து சுமார் 75 ஆயிரம் கனஅடி நீர் வரை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வந்தது.
ஒகேனக்கல் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாகக் குறைப்பு - water coming level at hogenakkal falls reduced
தருமபுரி : ஒகேனக்கல் அணைக்கு வரும் நீரின் அளவு திடீரெனக் குறைக்கப்பட்டு எட்டாயிரம் கன அடியாக தற்போது உள்ளது.
hoge
இந்நிலையில், கர்நாடகாவில் காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வந்த மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து நீர் திறப்பு நான்காயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஒகேனக்கல் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 15 ஆயிரம் கன அடியிலிருந்து, நேற்று (செப்.27) ஏழாயிரம் கனஅடி குறைந்து, எட்டாயிரம் கன அடியாக தற்போது உள்ளது.