கா்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜ அணையிலிருந்து நீர்த்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு 5 ஆயிரத்து 614 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் நீா்வரத்து கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தது.
பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக உயர்வு - ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி : காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
சில தினங்களாக காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று (செப்.3) காலை நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. மாலை வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தற்போது மேலும் அதிகரித்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் செல்கிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.