தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைக் காரணமாக இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு சுவர் - collapsed due to rain

பாலக்கோடு பகுதியில் பெய்த மழையால் அரசின் குளிர்பதன கிடங்கு சுவர் இடிந்து விழுந்தது.

மழை காரணமாக இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு சுவர்
மழை காரணமாக இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு சுவர்

By

Published : Jul 2, 2021, 2:22 PM IST

தருமபுரி: பாலக்கோடு அடுத்த கரகத அள்ளி கிராமத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.20 கோடி மதிப்பீட்டில் அரசு குளிர்பதனக் கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று (ஜூலை 1) மாலை பெய்த மழை காரணமாக 200 அடி நீளம் கொண்ட கிடங்கின் ஒரு பக்க சுவர் முழுமையாக இடிந்து கீழே விழுந்தது. அங்கு யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து தரமான கட்டுமான பொருள்களை பயன்படுத்தி குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:துணை முதலமைச்சரின் ஆலை முடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details