தர்மபுரி மாவட்டம் அரூர் பெரிய ஏரி சுமார் 170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு கொளகம்பட்டி கல்லாற்றின் குறுக்கே உள்ள கார ஒட்டு பகுதியிலிருந்து கால்வாய் வழியாகத் தண்ணீர் வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் வாணியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனையடுத்து, வாணியாறு அணையில் கடந்த ஒரு மாத காலமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இந்த உபரிநீரால், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டிபுதூர், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழியும். இந்தத் தண்ணீர் கல்லாற்றில் கலந்து தென்பெண்ணை ஆற்றுக்குச் செல்கிறது.
இந்நிலையில் கல்லாற்றில் கொளகம்பட்டி அருகே உள்ள காரை ஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. இதனை அறிந்து தன்னார்வலர்கள் அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீரைக் கொண்டுசெல்ல முயற்சி செய்தனா்.