தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு பேனருக்கு இவ்வளவு மரியாதையா.? மின் கம்பத்தில் ஜேசிபி மூலம் பழுது பார்த்த ஊழியர்.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேனருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜேசிபி மூலம் மின் கம்பத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட ஊழியரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அனுமதி ஆணை இல்லாத ஸ்டாலின் பேனர்
அனுமதி ஆணை இல்லாத ஸ்டாலின் பேனர்

By

Published : Mar 1, 2023, 12:12 PM IST

தர்மபுரி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின் கம்பத்தில் கட்டப்பட்ட பேனருக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஜேசிபி மூலம் பழுது பார்த்த மின்வாரிய ஊழியரின் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முழுவம் திமுக தொண்டர்கள் ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஒரு பேனருக்கு இவ்வளவு மரியாதையா

முதலமைச்சரின் பிறந்தநாளை அமைதியாக கொண்டாட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதோடு பேனர், அலங்காரங்கள் வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும், தருமபுரி நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தருமபுரி நெசவாளர் காலனி அருகே மின் கம்பத்தில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் கட்டப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. ஆனால், மின்வாரிய ஊழியர் பேனரை கழட்டாமலேயே, ஜேசிபி மூலம் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.

இந்த பணியை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. எளிதாக கழட்டிவிட்டு திரும்பவும் கட்டக்கூடிய பேனருக்கே இவ்வளவு மரியாதையா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். தருமபுரி நகர் பகுதிகளில் பேனர் வைக்க நகராட்சியில் முன் அனுமதி பெற்று அனுமதி ஆணையை அந்தந்த குறிப்பிட்ட பேனரில் ஒட்ட வேண்டும். அவ்வாறு ஒட்டப்படாத பேனர்கள் நகராட்சியால் அகற்றப்படுவது வழக்கம். ஆனால், தருமபுரி நகராட்சியில் ஒட்டப்பட்டுள்ள வாழ்த்து பேனரில் அனுமதி ஆணை எதும் ஒட்டப்படவில்லை.

இதையும் படிங்க: கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் கொள்ளை: 3 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details