தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூரிய கிரகணம்: ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் கிராமம் - சூரிய கிரகணம்

தர்மபுரியில் சூரிய கிரகணத்தின்போது ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து கிராம மக்கள் அறிந்துகொண்டனர்.

உலக்கை கீழே விழாமல் செங்குத்தாக நிற்கும் காட்சி
உலக்கை கீழே விழாமல் செங்குத்தாக நிற்கும் காட்சி

By

Published : Oct 25, 2022, 5:24 PM IST

Updated : Oct 25, 2022, 6:22 PM IST

தர்மபுரி: சூரிய கிரகணம் இன்று (அக். 25) தமிழ்நாட்டில் 5 மணி 14 நிமிடத்திற்கு தொடங்கியது. சூரிய கிரகணத்தின்போது ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்தால் உலக்கை கீழே விழாமல் செங்குத்தாக நிற்கும்.

கிரகணத்தின் போது மட்டும் தான் ஆட்டுக்கல்லில் உலக்கை நேராக நிற்கும். கிரகணம் முடிந்த பிறகு தானாகவே ஆட்டுக்கல்லில் வைக்கப்பட்டுள்ள உலக்கை கீழே விழுந்து விடும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் சூரிய கிரகணத்தின் போது மக்கள் வெண்கல தட்டில் தண்ணீர் ஊற்றி உலக்கையை நிற்க வைத்து பார்ப்பார்கள்.

தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியில் உலக்கையை ஆட்டுக்கல்லில் வைத்த போது உலக்கை நேராக நின்றது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசித்தனர்.

உலக்கை கீழே விழாமல் செங்குத்தாக நிற்கும் காட்சி

இதையும் படிங்க:அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Last Updated : Oct 25, 2022, 6:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details