தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சிக்குள்பட்ட ஏமனூர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பலமுறை அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்! - Villagers protest by hoisting black flags at houses
தர்மபுரி: பென்னாகரம் அருகே, அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ஏமனுார் பகுதி கிராம மக்கள் வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

protest
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
இதனால் கிராம மக்கள், இப்பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு மருத்துவரை நியமிக்க வேண்டும், பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், இலவச பட்டா வழங்க வேண்டும் எனப் பலமுறை அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், அதற்கு முன்னோட்டமாக இன்று (பிப். 15) வீடுகள்தோறும் கருப்புக் கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனா்.
இதையும் படிங்க: கடலூரில் காணாமல்போன குழந்தை புதுச்சேரியில் மீட்பு