தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே வனப்பகுதிகளிலிருந்து கிராமப் பகுதிகளுக்கு யானைகள் வருவது தொடர்ச்சியாக உள்ளது.
பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து கடந்த வாரம் 2 யானைகள் கிராமப்பகுதிகளில் நுழைந்து சுற்றித்திரிந்து மத்திய மின்சார நிறுவனத்தில் நுழைந்து நாசம் செய்த நிலையில், இன்று காலை தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேடறஅள்ளி கிராமத்தில் குடியிருப்பு அருகில் இரட்டை யானைகள் வந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.