தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலக்கோடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஊழல் தடுப்பு அலுவலர்கள் சோதனை! - ஊழல் தடுப்பு அலுவலர்கள் சோதனை

தருமபுரி: பாலக்கோடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இன்று (நவ.10) அதிரடியாக நுழைந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள், மாலை 6 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஊழல் தடுப்பு அலுவலர்கள் சோதனை
நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஊழல் தடுப்பு அலுவலர்கள் சோதனை

By

Published : Nov 10, 2020, 10:05 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நுகர் பொருள் வாணிப கழக கிடங்கு அமைந்துள்ளது. இங்கு, அதிரடியாக நுழைந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள் 5-க்கும் மேற்பட்டோர் இன்று (நவ.10) மாலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் எவ்வளவு பணம் சிக்கியது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதேபோல், கடந்த வாரம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிப்பட்ட அலுவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details