தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், அரூா், தர்மபுரி உள்ளிட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள சட்டபேரவை உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 76 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனா். இதில்,
- தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில், அரசியல் கட்சிகளைச் சார்ந்த 10 வேட்பாளர்கள், 11 சுயேச்சை வேட்பாளர்கள் என அதிகபட்சமாக 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- அரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் 13 வேட்பாளர்களில் எட்டு போ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஐந்து பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.
- பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 12 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், ஆறு பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.
- பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களில் ஏழு பேர் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், எட்டு போ் சுயேச்சை வேட்பாளர்கள்.
- பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களில் ஏழு பேர் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், எட்டு பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளா்கள் 12,67,798 பேர். அதில், ஆண்கள் 6,41,175 பேர், பெண்கள் 6,26,464 பேர், மூன்றாம் பாலினத்தவர் 159 பேர். இதில்,
தர்மபுரி சட்டபேரவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள் - 2,69,537 பேர்
ஆண்கள் - 1,35,889 பேர்
பெண்கள் 1,33,539 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 109 பேர்
பாலக்கோடு சட்டபேரவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள் 2,36,843 பேர்
ஆண்கள் - 1,19,828 பேர்
பெண்கள் - 1,16.997 பேர்
மூன்றாம் பாலினத்தவர் -18 பேர்
பென்னாகரம் சட்டபேரவை தொகுதி