மெட்ராஸ் மாகாணத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில தினங்களாகக் கொண்டாடிவருகின்றனர். இந்தவரிசையில் நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கர்நாடகா தினத்தில் அங்குள்ள பொதுமக்களும், அமைச்சர்களும் கர்நாடகாவிற்கு என உருவாக்கப்பட்ட தனிக் கொடியை ஏற்றி மாநில தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். அதுபோல, தமிழ்நாட்டிற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும்.
தமிழ்நாடு நாள் கொண்டாடும் அதே வேளையில் தமிழ்நாடு எனப்பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் தியாகத்தை நாம் நினைவு கூற வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும் மேலும், அந்த நாளில் அவருக்கு உரிய மரியாதையை அரசு செலுத்த வேண்டும். அவருடைய நினைவு தினத்தை அரசு வீரவணக்க நிகழ்வாக நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்கவும், பஞ்சமி நிலங்களைக் கணக்கெடுக்கவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆணையம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த ஆணையத்தைச் செயல்படுத்தி விரைவில் இப்பிரச்னையைத் தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வளவு நாள் பஞ்சமி நிலம் குறித்துப் பேசாத எச். ராஜா, ராமதாஸ் போன்றவர்கள் அரசியல் ஆதாயத்திற்காகவும், திமுக கூட்டணியில் சலசலப்பை உருவாக்குவதற்கும் தற்போது பஞ்சமி நிலம் குறித்துப் பேசி வருகிறார்கள்.
ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பஞ்சமி நிலம் குறித்து பேசுகிறார்-திருமா மேலும் உள்ளாட்சித் தேர்தலைத் நடத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் எழுகிறது. இவ்வளவு காலம் உள்ளாட்சித்தேர்தலை நடத்தாதது சட்டவிரோதமான செயல். வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஆளும் கட்சி தெரிவித்து வருகிறது. இந்த முறையாவது அவர்கள் கூறியது போல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் "என்றார்.
இதையும் படிங்க: 'மொழிவாரி மாநிலமும், தமிழ்நாடு பெயர் மாற்றமும்' - முத்தரசன், வீரமணி பேச்சு!