தருமபுரிமாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி(Pongal Festival), புகழ்பெற்ற 'எருதுவிடும் விழா' நடைபெறுவது வழக்கம். தருமபுரி நகர்ப் பகுதிகளில் விநாயகர் கோயில் தெரு, குப்பாண்டி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு உள்ளிட்டப் பகுதிகளின் வழியாக இளைஞர்கள் காளைகளை கயிறு கட்டி சாலையில் அடக்குவர்.
இந்நிலையில், தருமபுரி நகர் பகுதி குப்பாண்டி தெருவில் இன்று நடந்த 'எருதுவிடும் விழா'வில் (Dharmapuri erudhu vidum vizha 2023) காளைகளை கயிறுகள் மூலம் இளைஞர்கள் அடக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக காளையின் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை, காளை கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென முட்டி தூக்கி வீசியது. இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்தார்.