தர்மபுரி: பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று (மே14) இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று விவசாயி வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள கோழியை பிடித்துக்கொண்டு வனப்பகுதிக்கு செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.